ETV Bharat / city

பொதுத்தேர்வு மொழிப்பாட மாற்றத்தினை கைவிடுக! பி.கே. இளமாறன்

author img

By

Published : May 11, 2019, 12:35 PM IST

பொதுத்தேர்வு

சென்னை: தமிழ் அல்லது ஆங்கிலம் என ஏதேனும் ஒரு மொழியினை மாணவர்கள் பொதுத் தேர்விற்கு தேர்வு செய்தால் போதும் என தமிழ்நாடு அரசுக்கு பள்ளிக் கல்வித் துறை பரிந்துரை செய்வதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே. இளமாறன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பள்ளிக் கல்வித் துறை மொத்தப்பாடங்களின் எண்ணிக்கையை ஆறில் இருந்து ஐந்தாக குறைப்பது மாணவர்களின் மொழி ஆர்வத்தை குறைக்கச்செய்யும் நடவடிக்கையாகும் என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், 11ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதாவது ஒரு மொழியினை தேர்ந்தெடுக்கச் சொல்லும்போது ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பாடத்தை ஒதுக்கித்தள்ளுவார்கள். ஏற்கனவே தமிழ்ப்பாடம் கட்டாயம் என்று சட்டம் இயற்றியது என்னவாகும்? என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். மேலும் தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலப்பாடத்தைப் புறக்கணிப்பார்கள். இதனால் தொடர்புமொழியும் துண்டிக்கப்படும். இருமொழிக்கொள்கை காற்றில் பறக்கும் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

இறுதியாக, 10ஆம் வகுப்பிற்கு இனி தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடங்களுக்கு இரண்டாம் தாள் கிடையாது எனப் பரிந்துரைப்பதும் மொழியின் தாக்கத்தை அழிக்கும் நடவடிக்கையாகும். இரண்டாம் தாள் என்பது மொழியினை பிழையின்றி எழுதவும் படிக்கவும் மட்டுமல்லாமல், மொழி இலக்கணத்தையும், ஆளுமைத்தன்மையையும் வெளிப்படுத்தும் என கூறினார். பள்ளிக் கல்வித் துறையின் பரிந்துரையை நிராகரித்து மொழியின் வளர்ச்சியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றிட வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார்.

பொதுத்தேர்வு மொழிப்பாடங்களில் மாற்றம் -   பரிந்துரையினை கைவிட வேண்டும்

சென்னை,
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின்
மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன்வெளியிட்டுள்ள அறிக்கையில்,  11 மற்றும் 12ம் வகுப்பு மொழிப்பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தால் போதும்  என அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது .


மொத்தப்பாடங்கள் எண்ணிக்கையை 6ல் இருந்து 5 ஆக குறைப்பது எளிமையாக்குவதாக நினைத்து மாணவர்களிடையே மொழி ஆர்வத்தை குறைக்கச்செய்யும் நடவடிக்கையாகும்
   11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதாவது ஒரு மொழியினை தேர்ந்தெடுக்கச் சொல்லும் போது ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பாடத்தை ஒதுக்கித்தள்ளுவார்கள். ஏற்கனவே தமிழ்ப்பாடம்  கட்டாயம் என்று சட்டம் இயற்றியது என்னவாகும்?  தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். மேலும் தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலப்பாடத்தைப் புறக்கணிப்பார்கள் இதனால் தொடர்புமொழியும் துணடிப்பதாகும். இருமொழிக்கொள்கை காற்றில் பறக்கும்.

10ம் வகுப்பிற்கு இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு 2 தாள் கிடையாது, ஒரே தாள் தான் பரிந்துரைப்பதும் மொழியின் தாக்கத்தை அழிக்கும் நடவடிக்கையாகும். இரண்டாம் தாள் என்பது மொழியினை பிழையின்றி எழுதவும் படிப்பது மட்டுமல்ல மொழி இலக்கணத்தையும் ஆளுமைத்தன்மையையும் வெளிப்படுத்தும் .
பள்ளிக்கல்வித்துறையின் பரிந்துரையை நிராகரித்து மொழியின் வளர்ச்சியும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றிட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.